இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை ஊக்குவித்து மேம்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் 90 மில்லியன் யூரோக்களை கடன் உதவியாக வழங்க முன்வந்துள்ளது.
நேற்றைய தினம் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஹேர்மன் வேன் றொம்பியூ அவர்கள் உள்ளடங்கலான பிரதிநிதிகளுக்கும் இடையில் நிகழ்ந்த கலந்துரையாடலின் போதே இவ் உதவித்திட்டம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.
மேற்படித் தொகையானது வங்கிகள் ஊடாக சலுகைக் கடன்கள் அடிப்படையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்படும்.
நிதி அமைச்சின் ஊடாக செயற்படுத்தப்படும் இத்திட்டத்தில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு இணைந்து செயற்படும்.
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவி
Tag: Srilanka1

