Slider

Blog links

Featured Posts Coolbthemes

இலங்கைச் செய்திகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

விந்தை உலகம்

தீவகச் செய்திகள்

» » வைர நகை கடை திறப்புவிழாவில் ஆபாச போஸ் கொடுத்தாரா சன்னி லியோன். டுவிட்டர் செய்தியால் சர்ச்சை.

கனடாவில் ஆபாச நடிகையாக இருந்து பாலிவுட்டின் முன்னணி நடிகையாக மாறிய நடிகை சன்னிலியோன் குறித்த சர்ச்சைக்குரிய செய்தி ஒன்று டுவிட்டரில் வெளியானதால் அவர் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சன்னிலியோன் கூறியதாவது: ஏப்ரல் 18ஆம் தேதி மும்பையில் உள்ள ஒரு வைரநகைக்கடையை திறந்துவைக்க நான் சென்றிருந்தேன். அந்த திறப்புவிழா நிகழ்ச்சியில் நான் நகைக்கடை அதிபர் முன்பு வேண்டுமென்றே எனது மேலாடையை விலக்கியதாக டுவிட்டரில் தவறான செய்தி வந்துள்ளது. கிராபிக்ஸில் நான் மேலாடையை விலக்கியபடி இருப்பதான புகைப்படைத்தையும் தயார் செய்து சில விஷமிகள் வெளியிட்டுள்ளனர்.

இதுபோன்ற பொய்யான செய்திகள் எனக்கு மனவேதனையை தருகிறது. நான் ஒரு காலத்தில் ஆபாச நடிகையாக இருந்தாலும், தற்போது பாலிவுட் சினிமாவில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். இதுபோன்ற பொய்யான தகவல்களை பதிவு செய்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க ஆலோசனை செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஆனால் இந்த புகைப்படத்தை வெளியிட்ட டுவிட்டர் பயனாளி தான் பதிவு செய்த புகைப்படம் உண்மைதான் என்றும் அதை நிரூபிக்க தயார் என்றும் கூறியுள்ளார். ஆனால் இந்த படம் டுவிட்டரில் இருந்து தற்போது நீக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

«
Next
Newer Post
»
Previous
Older Post