Slider

Blog links

Featured Posts Coolbthemes

இலங்கைச் செய்திகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

விந்தை உலகம்

தீவகச் செய்திகள்

முன்னால் தளபதி மகேந்தியின் குடும்ப மரணத்தில் உதவாத “TNA” மற்றும் வெளிநாட்டுப் “புலிகள்”




புற்றுநோயால் கொழும்பில் உயிரிழந்த குழந்தையினது பூதவுடலை கொழும்பிலிருந்து எடுத்துச் செல்ல பெண் தொழிலாளர்கள் கைகொடுத்து முன்னுதாராணம் ஆகியுள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பின் யாழ்.தளபதிகளுள் ஒருவராக இருந்தவர் மகேந்தி. அவருட்பட மூன்று பேர் குடும்பத்திலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்திருந்தனர். அவர்கள் எவரும் தற்போது உயிருடனில்லை.

இந்நிலையில் அவர்களது ஒரு சகோதரனான யோகேந்திரன் தனது குடும்பத்துடன் வன்னியில் வறுமையில் வாழ்ந்து வருகின்றார். அவரது மகளான தமிழ்மதி புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு போதிய சிகிச்சையின்றி உயிரிழந்துள்ளார். கொழும்பு சென்று மருத்துவ சிகிச்சையினைப்பெற போதிய பணவசதி இன்மையினாலேயே அக்குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அரச அம்புலன்ஸ் மூலம் கொழும்பில் சிகிச்சைக்கென கொண்டு செல்லப்பட்ட இக்குழந்தை தற்போது உயிரிழந்துள்ளது.

எனினும் பூதவுடலை வன்னிக்கு எடுத்துச் செல்ல பணமின்மையால் கடந்த சில நாட்களாக கொழும்பில் பிரேத அறையில் அச்சிறு குழந்தையினது பூதவுடல் வைக்கப்பட்டிருந்தது. சம்பவம் பற்றி அறிந்த கிளிநொச்சியிலுள்ள தனியார் ஆடை தையற் தொழிற்சாலை பெண்பணியாளர்கள் இணைந்து திரட்டி வழங்கிய பணத்தை அடுத்து பூதவுடல் சொந்த இடத்திற்கு இன்று கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இங்கு ஒரு விடயத்தை சுட்டிக் காட்டுவது இன்றைய சூழலிற்கு தகும் காரணம் கடந்த காலங்களில் தமிழர்களின் போராட்டங்களை வலிமையாக்கியதில் பாரிய பங்களிப்புச் செய்த பல தளபதிகள் போராளிகள் வீதிகளில் பிச்சை எடுக்காத குறையாக திரியும் நிலை பற்றி யாரும் சிந்தித்ததுண்டா இல்லை காரணம் அவர்களிடம் இன்று எதுவும் இல்லை அது மட்டுமா அவர்களை இன்று மதிக்கும் பண்பும் அற்ற நாதியற்ற தமிழன்.

புலிகளின் போராட்டத்தில் பாரிய பங்களிப்புச் செய்த மகேந்தியின் குடும்பத்தைப் பற்றி யாரும் சிந்தித்ததுண்டா?  இல்லை ஆனால் மகேந்தி இறந்த நினைவு நாளை மதிக்கும் இன்றும் அண்ண வருவார்! அடுத்த போராட்டம் விரைவில்..  ஆரம்பம் எனும் வெளிநாட்டுப் புலிகள் எங்கே? இவர்கள் வருடத்திற்கு ஒரு மாவீரர் தினம் மற்றும் வருடத்தில் பல கலை நிகழ்வுகள் செய்பவர்கள் இதைப் பற்றி சிந்தித்த நாட்கள் உண்டா? இல்லை!  இவர்களுக்கு மகேந்தியின் குடும்பத்தில் எத்தனை உறவுகள் எனத் தெரியுமோ தெரியாது? இன்னும் பல மகேந்தியின் குடும்பங்கள் வீதிகளில் இதைப்பற்றி வெளிநாட்டில் வாழும் ஒரு சிலர் நினைப்பதுண்டு! பலர் நினைப்பதில்லை காரணம் அவ்வாறான நிலைதான் இன்று உள்ளது.

நாட்டில் தமிழரின் தீர்வு விடயத்தில் அடிபடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியும் எங்கே? முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான வட மாகாணசபை எங்கே? தன் இனத்தின் மரணத்திற்கு உதவ முடியாத நாதியற்ற தமிழ் தலைவர்கள் எல்லாம் தமிழர்களின் தலைவர்கள் இந்த அவலத்தை யாரிடம் முறையிடுவது….

இப்படி யாருமற்ற அனாதையான தமிழ் இனத்தை யார் காப்பாற்றுவான்? யாரிடம் செல்வது என புரியாமல் தமிழரின் கண்ணீரில் இரத்தம் கலக்கிறது துடைப்பதற்கு யார் வருவார்…..

காஞ்சிபுரத்தில் இலங்கை பெண் அடித்துக் கொலை

தமிழ்நாடு – காஞ்சிபுரம் அருகே இலங்கை பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவம் கிராமத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அருகே வையாவூர் பாரதிநகரில் வசிப்பவர் பூமணி. இவர் நந்தம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றுகின்றார்.

இவரது மனைவி புனிதவதி (44). இவர்கள் கடந்த 30 வருடத்துக்கு முன் இலங்கையில் இருந்து அகதிகளாக வந்தவர்கள். இவர்களது மகள் அம்சத்துவானி (17). 10ம் வகுப்பு படிக்கிறாள். மகன் இறையன்பு, பொறியியல் முடித்துவிட்டு திருச்சியில் வேலை செய்கிறார்.

மற்றொரு மகன் தினேஷ்குமார் (19) பிளஸ் 2 படித்து வருகிறான். நேற்றிரவு 7 மணி அளவில் புனிதவதி, அந்த பகுதியில் உள்ள தனது அக்கா சுசீலா வீட்டுக்கு சென்றார்.

இதன்பிறகு நள்ளிரவு ஆகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து மனைவியை தேடி சுசீலா வீட்டுக்கு பூமணி சென்றார். அங்கிருந்து புனிதவதி கிளம்பிவிட்டது தெரிந்தது.

இதையடுத்து புனிதவதியை பல இடங்களில் தேடி அலைந்தனர். ஆனால் அவரை பற்றி தகவல் இல்லை.

இந்நிலையில், தனது வீட்டின் பின்புறம் உள்ள ஏரிக்கரை புதரில் பலத்த காயத்துடன் புனிதவதி இறந்துக் கிடந்தது பார்த்து குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலை பார்த்து பூமணி கதறி துடித்தார்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் காஞ்சிபுரம் தாலுகா பொலிஸ் பொறுப்பதிகாரி மாதவன் சம்பவ இடத்துக்கு விரைந்தார்.

புனிதவதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். உருட்டுக்கட்டையால் அடித்து புனிதவதி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார், புனிதவதியை கொன்றது யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று விசாரிக்கின்றனர்.

மேலும் கொலை தொடர்பாக அவரது கணவர் பூமணி மற்றும் நெருங்கிய உறவினர்களிடம் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வையாவூரில் பீதியை ஏற்படுத்தி கிளப்பியுள்ளது.

நாக்கை பிளேடால் அறுத்து சிவபெருமானுக்கு காணிக்கை செலுத்திய 17 வயது இளைஞன். அதிர்ச்சி புகைப்படங்கள்


நாக்கை பிளேடால் அறுத்து சிவபெருமானுக்கு காணிக்கை செலுத்திய அதிர்ச்சி சம்பவம் ஒன்று இந்தியாவில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள மகாதேவ்கர்ஹா கோவிலிலுக்கு நேற்று வந்த 17 வயது Lalmohan Soren என்பவர் திடீரென கோவிலில் உள்ள சிவபெருமான சந்நிதியில் முன்னால் பிளேடு ஒன்றை எடுத்து திடீரென தனது நாக்கை அறுத்து காணிக்கை செலுத்தினான்.

அந்த இளைஞனுக்கு பக்கத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் அலறினர். உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்ட Lalmohan Sorenக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் மீண்டும் அந்த இளைஞனுக்கு நாக்கை ஒட்ட வைக்க முடியவில்லை.

தற்போது வெறும் திரவ உணவு மட்டும் சாப்பிட்டு வரும் Lalmohan Soren, வாய்பேச முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.

Lalmohan Soren குடும்பத்தினர் இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்தாலும், தன்னுடைய மகன் கடவுளுக்கு கொடுத்த காணிக்கையை எண்ணி பெருமைப்படுவதாக கூறினர். சிறுவயதில் இருந்தே தன்னுடைய மகன் பக்தியாக இருந்ததாகவும், சிவபெருமான் மீது அவன் மிகுந்த ஈடுபாடு உடையவன் என்றும் அந்த இளைஞனின் தாயார்  Lalmuni Soren அவர்கள் கூறினார்.

இந்தியா சென்ற இலங்கை சிறுவர்களை சிறையில் அடைப்பதில் இழுபறி..




கடந்த 5 ஆம் தேதி இலங்கை முல்லைத் தீவு மற்றும் கண்டியிலிருந்து 3 குழந்தைகள், 2 சிறுவர்கள் உட்பட 10 பேர் கொண்ட இரண்டு குடும்பங்கள் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு அகதிகளாக வந்தடைந்தனர்.  தமிழகத்துக்கு அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்கள் 10 பேரை சிறையில் அடைக்க ராமேஸ்வரம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அகதிகளின் குழந்தைகளை சிறைக்குள் அனுமதிக்க புழல் சிறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினரின் விசாரணைக்கு பின் பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் குழந்தைகள் தவிர்த்து மற்ற 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் நீதிபதி சரவணக்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அகதிகளை விசாரித்த நீதிபதி, மே 19-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்திரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து கைதான 2 சிறுவர்கள், தயாபரராஜன் என்பவரது மகன் டியோரன் (9), கணேஷ் சுதாகர் என்பவரது மகள் நிலக்‌ஷனா (12) மற்றும் 3 குழந்தைகள் உள்பட 10 பேரையும் சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் டியோரன் (9), நிலக்‌ஷனா (12) ஆகிய இருவரும் சிறுவர்களாக இருப்பதால் சிறைக்குள் அனுமதிக்க சிறைத்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். மற்ற மூன்று குழந்தைகளை அவர்களின் தாயாருடன் இருக்க அனுமதித்தனர். இதனையடுத்து இரண்டு குழந்தைகளையும் காவல்துறையினர் ராமேஸ்வரத்திற்கு திரும்பவும் புதன்கிழமை அழைத்து வந்தனர்.

தற்போது காவல்துறையினர் பாதுகாப்பில் உள்ள இரண்டு குழந்தைகளையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறுவர்களின் உறவினர்களால் பிணையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்திய பிரபல பொலிவூட் நடிகையான ஐஸ்வர்யா ராயும் நானும் பல ஆண்டுகளாக காதலித்தோம் - இலங்கையர் முறைப்பாடு

இந்திய பிரபல பொலிவூட் நடிகையான ஐஸ்வர்யா ராயுடன் தான் தொடர்புகொண்டிருந்ததாகவும் அதன் பின்னர் அவர் இந்திய நடிகர் மற்றும் இயக்குநரான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டதனால் தான் மன உளைச்சலுக்கு உள்ளாகியதாகவும் இலங்கையர் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணை பணியத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.

அதற்கான நட்டஈட்டை ஐஸ்வர்யா ராயிடம் பெற்றுக்கொள்வதற்காக வழக்கு தாக்கல் செய்யுமாறு மருமகன் எனக்கு ஆலோசனை வழங்கியதாகவும் வழக்கு தாக்கல் செய்வதற்காக கொடுத்த 1.7 மில்லியன் ரூபாவை மருமகன் மோசடி செய்ததாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தாய்வானில் வசித்து வரும் நிரோஷன தேவப்பிரிய என்பவரே இவ்வாறு முறைப்பாடொன்றை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து அவர் இலங்கை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். பிரபல பொலிவூட் நடிகை ஐஸ்வரியா ராயும் நானும் தொடர்பு கொண்டிருந்தேன். ஆயினும், அவர் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குநரான அபிஷேக் பச்சனை திருமணம் செய்தமையினால் நான் மனரீதியாக பாதிக்கப்பட்டேன்.

இவ்வாறு ஏமாற்றப்பட்டதன் பின்னர் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். அவ்வாறு உள்ளானதற்காக ஐஸ்வர்யா ராயிடம் நட்டஈடு கோரவேண்டும் என எண்ணினேன். அதனடிப்படையில் இலங்கையில் பாணந்துறையில் வசித்து வரும் எனது மருமகனான ரொஷான் அஜித்திடம் இவ்விடயம் குறித்து தெரிவித்தேன்.

இப்பொறுப்பை தன்னிடம் ஒப்படைக்குமாறு கூறிய மருமகன், இலங்கையில் வழக்கு தாக்கல் செய்வதென்றால், சட்டத்தரணிக்கு செலுத்துவதற்கும், வழக்கு சம்பந்தமான மற்றைய அனைத்து செலவுகளுக்கும் 1.7 மில்லியன் ரூபா அவசியம் என்றும் அத்தொகையை தன்னிடம் தருமாறும் கேட்டார்.

அந்த பணத்தை நான் செலுத்தியிருந்தும் அவ்வாறான வழக்கிற்கான எந்தவொரு நடவடிக்கையும் மருமகன் எடுக்கவில்லையென தெரியவந்தது. அதன் பின்னரே இம்முறைப்பாட்டை செய்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மோசடி செய்ததாக கூறப்படும் நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்திய போது, தான் மோசடி செய்த பணத்தை தவணைமுறையில் திருப்பிக்கொடுப்பதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து ரூ.500,000 இரண்டு சரீரப்பிணையில் அவரை நீதவான் திலின கமகே விடுதலைச்செய்தார். தான் மோசடி செய்த பணத்தில் மாதாந்த தவணைக்கட்டணமாக ஒரு மில்லியன் ரூபாவை செலுத்துவதற்கும் அவர் இணக்கம் தெரிவித்துள்ளார்