யாழ்.மாநகர சபையில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வந்துள்ள 87 பணியாளர்களுக்கு இன்றைய தினம் (28) நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன.
முன்னுரிமை அடிப்படையில் பணியாளர்களது சேவைகளையும் ஏனைய தகைமைகளையும் கருத்தில் கொண்டு இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நடைபெற்ற நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டார்.
சிறப்பு அதிதிகளாக ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்), அமைச்சரின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி குகேந்திரன் அவர்களும் கலந்து கொண்டனர்.
நிரந்தர நியமனப் பத்திரங்களை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மாநகர முதல்வர், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஆணையாளர் ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டன.
யாழ்.மாநகர சபை பணியாளர்கள் 87 பேருக்கு நிரந்தர நியமனங்கள்[படங்கள்]
Tag: breaking news


