Slider

Blog links

Featured Posts Coolbthemes

இலங்கைச் செய்திகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

விந்தை உலகம்

தீவகச் செய்திகள்

» » பெண்கள் மூக்குத்தி அணிவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?.......



மூக்குத்தி குத்திக் கொள்வதால் பெண்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதிகம். இதனால் பண்டைய காலத்திலேயே மூக்கு குத்திக் கொள்ளும் வழக்கம் உருவானது. மூக்கு குத்துவதினாலும் காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன. உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால் அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்லாமல் மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப்படுகிறது. மூக்குக் குத்துவதால் பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள் மற்றும் மனத்தடுமாற்றம் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்

«
Next
Newer Post
»
Previous
Older Post