
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 20,000 வீடுகளை நிர்மானித்து வழங்கி உதவியதற்காக எமது மக்கள் சார்பாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
நேற்றைய தினம் மாலை கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய தின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் அவர்கள்,
இலங்கை ஜனநாயக சோ~லிச குடியரசின் மேன்மைதங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ அவர்கள் சார்பாகவும், இலங்கை அரசின் சார்பாகவும், எமது நாட்டு மக்களின் சார்பாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் கௌரவ ஹேர்மன் வேன் றொம்பியூ அவர்களுக்கும், ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜோய் மனுவல் பறோஸா உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் முதலில் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
1962 ம் வருடம் ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இலங்கைக்கும் இவ் ஒன்றியத்திற்கும் இடையிலான உறவுகள் வலுப்பெற்று வருவதையே நாம் காண்கின்றோம்.
இலங்கையின் மொத்த உற்பத்தியில் 35 வீதம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றமதி செய்யப்படுகின்ற நிலையில் இது, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கின் பொருளாதார மீள் எழுச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்து வருகின்றது. இந்த சாதகமான சூழல் எதிர்காலத்தில் மேலும் வலுப்பெற்று நீடிக்கும் என நான் எதிர்பார்க்கின்றேன்.
எமது நாட்டில் இயல்பு நிலை தோன்ற ஆரம்பித்தது முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான உதவிகள் முதற்கொண்டு அபிவிருத்திக்கான ஒருங்கிணைந்த பங்களிப்புக்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன.
அதேநேரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் 'சுவிச் ஏ~pயா" திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற உதவிகள் வரவேற்கத்தக்கன. அந்த வகையில் எமது பொருளாதார வளர்ச்சிக்கும், நிலையான அபிவிருத்திக்கும,; வறுமை ஒழிப்புக்கும், தொழில்நுட்பத்துறை சார்ந்த வளர்ச்சிக்கும் இத்திட்டம் பெரிதும் உதவுகின்றது. இத்திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு எனது அமைச்சின் மூலமும் பங்களிப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதே நேரம் மேற்படி ஒன்றியத்தின் 'பொரிசின் 2020 கெங்கெட்" திட்டமானது எமது நாட்டின் உயர் கல்வித்துறை சார்ந்த கல்வியியலாளர்களும், ஆராச்சியாளர்களும் புதிய கண்டுபிடிப்பு துறைகளில் ஈடுபட்டு அத்துறை சார்ந்து தம்மை வளர்த்துக் கொள்வதற்கு பெரிதும் உதவியாக அமைந்துள்ளது.
இதன் பிரகாரம் இலங்கையில் 120 மாணாக்கர் மேற்படி ஒன்றியத்தின் நேரடி நிதி உதவியினால் இத்துறை சார்ந்து பயன் பெறுவதுடன் கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களும் பயன் பெற்று வருகின்றன. இந்நிலையில் யாழ்ப்பாணம், கிழக்கு மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகங்களும் எதிர்காலத்தில் இத்திட்டத்தின்; மூலம் பயன்பெறும் என நான் நம்புகின்றேன்.
மேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ அவர்களது தலைமையில் கடந்த வருடம் எமது நாட்டில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெற்றது. இந்த நாடுகளுடனான எமது ஐக்கியத்தையும் நல்லுறவையும் இந்த மாநாட்டின் மூலம் நாம் வெளிப்படுத்தியுள்ளோம்.
அதே போன்று இன்று அம்பாந்தோட்டையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள உலக இளைஞர்கள் மாநாட்டின் மூலம் இளைஞர்களை சர்வதேச ரீதியில் தீர்மானங்களை எடுக்க கூடிய சக்திகளாக மாற்றும் செயற்பாட்டிற்கு நாம் எமது முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளோம் எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், அண்மையில் புதிதாக நியமனம் பெற்றுள்ள தலைவரின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து வலுப்பெறும் என தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.




