Slider

Blog links

Featured Posts Coolbthemes

இலங்கைச் செய்திகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

விந்தை உலகம்

தீவகச் செய்திகள்

» » » விக்னேஸ்வரனே ஜனாதிபதி பொதுவேட்பாளராக தகுதியானவர்!! - தமிழ் தேசியக் கூட்டமைப்பு??



வடமாகாண முதலமைச்சரே ஜனாதிபதி பொது வேட்பாளர் நிலைக்கு தகுதியானவர். அவரை பொது வேட்பாளராக தெரிவு செய்வதன் மூலம் எதிர்க கட்சிகளின் பொது வேட்பாளர் தேடும் படலத்துக்கு விடை கிடைக்கும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  நடைபெற்ற அதிகாரப்பரவாலாக்கல் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், எதிர்க்கட்சிகள் விரும்பினால் ஜனாதிபதி தேர்தலை நடத்த தயார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

தற்போது அவருடைய தம்பி பொதுத்தேர்தல் நடத்தப்படப் போவதாக கூறுகிறார்.

இந்த அரசாங்கத்தை பொறுத்தவரை நேரத்துக்கு நேரம் தமது கருத்துக்களை மாற்றும் கொள்கையை கொண்டிருக்கிறது.

எனவே அரசாங்கம் எந்த தேர்தலையும் நடத்தலாம்.

இந்தநிலையில் வடக்கின் முதலமைச்சரே நீதியரசராக இருந்த காலத்தில் இருந்து தற்போது வரை சிறந்த பண்புடையவராக உள்ளார்.

இதன் காரணமாகவே பத்தி எழுத்தாளர் குசல் பெரேரா அவரை பொதுவேட்பாளராக்க வேண்டும் என்று யோசனை வெளியிட்டிருந்தார்.

இதனை ஐக்கிய தேசியக்கட்சி ஜே வி பி மற்றும் சரத் பொன்சேகாவின் கட்சி ஆகியன பரிசீலிக்கவேண்டும்.

அவரை நிராகரித்தால் அதற்கான காரணத்தை கூற வேண்டும் என்று சுமந்திரன் குறிப்பிட்டார்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் கடந்த தேர்தலின் போது வெறும் 200 வாக்குகளுக்கு குறைந்த எண்ணிக்கையானவர்கள் வாக்காளர்களாக பதிவுசெய்திருந்தமையால், அங்கு ஒரு நாடாளுமன்ற உறுப்புரிமை குறைக்கப்பட்டது.

எனவே இந்த தடவை அந்த நாடாளுமன்ற ஆசனத்தை யாழ்ப்பாணத்துக்கு பெற்றுக் கொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு வெளியில் உள்ள யாழ்ப்பாணத்தவர்கள் தம்மை வாக்காளர்களாக பதிவுசெய்து கொள்ள வேண்டும் என்று சுமந்திரன் கோரிக்கை விடுத்தார்.




«
Next
Newer Post
»
Previous
Older Post