Slider

Blog links

Featured Posts Coolbthemes

இலங்கைச் செய்திகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

விந்தை உலகம்

தீவகச் செய்திகள்

» »Unlabelled » பிரேசில்: 6 அடி 8 இன்ச் உயரமுள்ள பெண்ணை காதலிக்கும் 5 அடி 4 இன்ச் வாலிபர்.



பிரேசில் நாட்டில் உள்ள ஒரு இளம்பெண் 6 அடி 8 இன்ச் உயரம் கொண்டவர். இவர்தான் பிரேசிலின் மிக உயரமான பெண் என்ற பெருமையை பெற்றவர். இவர் தன்னைவிட 1 அடி 4 இன்ச் குறைவான உயரம் உள்ள காதலருடன் வாழ்ந்து வருகிறார். விரைவில் இருவரும் திருமணம் நடக்கவுள்ளது.

பிரேசில் நாட்டை சேர்ந்த 18 வயது இளம்பெண் Elisany da Cruz Silva. இவருக்கு சிறுவயதில் gigantism என்ற குறைபாடு இருந்ததன் காரணமாக சிறுவயது முதலே அபாரமான உடல்வளர்ச்சியை பெற்றார். இவர் 18 வயது பூர்த்தி அடையும் முன்னர் 6 அடி 8 இன்ச் அளவுக்கு உயரமானார்.

தற்போது இவர் Francinaldo என்ற காதலருடன் திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வருவதாகவும், மிக விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. Francinaldo  அவர்களின் உயரம் வெறும் 5 அடி 4 இன்ச் மட்டுமே.

Elisany da Cruz Silva திருமணம் ஆனால் இவர்தான் உலகின் மிக உயரமான மணமகள் என்ற பெருமையை பெறுவார். இவர்கள் இருவரும் உயர வித்தியாசமின்றி சாலைகளிலும், கடற்கரையிலும் காதலித்து வருவதை பிரேசில் மக்கள் அதிசயத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

திருமணத்திற்கு பின்னால் தன்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா என்பது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று வருவதாகவும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி தன்னுடைய திருமணம் நடக்கும் என்றும் Elisany da Cruz Silva கூறியுள்ளார்.

16 வயதுமுதலே தனது காதலனுடன் வாழ்ந்து வரும் Elisany da Cruz Silva, எப்போது திருமணம் செய்வார் என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


«
Next
Newer Post
»
Previous
Older Post