இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்னையில் விளையாடுவதற்கு தடைவிதிக்கவேண்டுமென வீரமாணிக்கம் எஸ்.எஸ்.சிவா கோரிக்கை.
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்னையில் விளையாடுவதற்கு தடைவிதிக்கவேண்டுமென வீரமாணிக்கம் எஸ்.எஸ்.சிவா கோரிக்கை.
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்னையில் விளையாடுவதற்கு தடைவிதிக்கவேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல பொதுச்செயலாளர் வீரமாணிக்கம் எஸ்.எஸ்.சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கை அரசாங்கத்தின் மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றினார்.
ஆனால் தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத மத்திய அரசு இதுவரை இலங்கை இனவெறி அரசு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்ற ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல், கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளில் தமிழகத்தில் விளையாடும் எந்த அணியிலும் இலங்கை வீரர்கள் விளையாட தமிழக அரசு தடைவிதித்தது. தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னையில் ஐ.பி.எல், போட்டிகள் நடைபெற உள்ளள. அவ்வாறு சென்னையில் நடக்கும் அனைத்து போட்டிகளிலும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் விளையாட தடைவிதிக்க வேண்டுமென தமிழக அரசை இந்து மக்கள் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tag: Sri lanka news Srilanka
