
யாழ். வல்லைப் பகுதியிலுள்ள வீட்டு வளாகமொன்றிலிருந்து கைக்குண்டொன்று நேற்று மாலை மீட்கப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பில் அவ்வீட்டு உரிமையாளர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை தொடர்ந்து இராணுவத்தினருடன் அங்கு சென்று கைக்குண்டை மீட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி இவ்வீட்டு வளாகம் பகுதி இராணுவ முகாமாக பயன்படுத்தப்பட்ட நிலையில் அண்மையில் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ். வல்லைப் பகுதியில் கைக்குண்டொன்று மீட்பு.
 
 
 
 
 
 
 
 
 
 
