குறிகாட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சங்குராணி என்ற படகு நேற்றுச்
படகின் கால்ப்பங்கு கடலில் மூழ்கியுள்ள நிலையில் இதனை அவதானித்த கடற்படையினர் அப் படகில் பயணித்த 60 ற்கும் 80 இற்கும் இடைப்பட்ட பயணிகளைக் காப்பாற்றியுள்ளனர்.
இவ் விபத்துக்குப் படகின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் திருவிழா அண்மையில் ஆரம்பமாகவுள்ள நிலையில் குறிகாட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்துப் படகுகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்திச் சேவையில் ஈடுபட அனுமதிக்குமாறு அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் இவ்வாறான கோரிக்கைகள் தம்மால் பல முறை அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த நிலையில் தமது கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவரும் கருத்தில் கொள்ளாத நிலையில் மேற்படி விபத்து நிகழ்ந்துள்ளதாக மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் உற்சவம் ஆரம்பமாகும் நிலையி்ல் பெருந்தொகையான மக்கள் படகுகளில் பயணிக்கும் நிலை ஏற்படும் போது இவ்வாறான அசம்பாவிதங்கள் நிகழ்வதைத் தடுக்க அதீத கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவ் அதிகாரிகளை மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நயினாதீவுக் கடலில் மூழ்க முயற்சித்த படகு! முறியடித்த கடற்படை!!
Tag: Srilanka1