அமைச்சர் நடவடிக்கை
வடமாகாணத்திலுள்ள ஆங்கில மருந்து வர்த்தக நிலையங்களில் காணப்படும் மருந்தாளர் பற்றாக்குறையை நிவர்த்தி
செய்யும் பொருட்டு விசேட அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பித்து அதனூடாக உரிய தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கை
முன்னெடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் மேற்படி விடயம் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம்
(02) இடம்பெற்றது.
இதன்போது வடபிராந்திய ஆங்கில மருந்து வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் தமது வர்த்தக நிலையங்களில் மருந்தாளர் இல்லாத
நிலையில் மருந்து வகைகளை விற்பனை செய்வதில் தாம் எதிர்நோக்கி வரும் இடர்பாடுகள் தொடர்பாக எடுத்துரைத்தனர்.
வடமாகாணத்தில் நூறு வரையான மருந்தாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் இதனைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை
முன்னெடுக்க வேண்டுமென அமைச்சர் அவர்களிடம் சங்கப் பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்திய அமைச்சர் அவர்கள் இதற்கு விசேட அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்து
உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுமெனத் தெரிவித்ததுடன்ää தற்போது மருந்தாளர்களாக கடமையாற்றுபவர்களுக்கு விசேட
பயிற்சி வகுப்புக்களையும்ää வழிகாட்டல் கருத்தரங்குகளையும் நடாத்த வேண்டுமெனவும் தெரிவித்த அமைச்சர் அவர்கள்
ஆங்கில மருந்து வர்த்தக நிலையங்களில் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படுவதுடன் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்
தொடர்பிலும் வலியுறுத்தினார்.
அத்துடன்ää வர்த்தக சங்கப் பிரதிநிதிகளின் ஏனைய பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக இதன்போது விரிவாக
கலந்துரையாடப்பட்டது.
இதன்போது ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாää மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
திருமதி யூட்ää பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.
வடமாகாண ஆங்கில மருந்து வர்த்தக நிலையங்களில் காணப்படும் மருந்தாளர் பற்றாக்குறைக்கு விசேட அமைச்சரவைப்பத்திரம்!
Tag: Sri lanka news Srilanka

