Slider

Blog links

Featured Posts Coolbthemes

இலங்கைச் செய்திகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

விந்தை உலகம்

தீவகச் செய்திகள்

» »Unlabelled » தமிழர்களுடைய பிரச்சினையை ஆராயப்போகிறதாம் கூட்டமைப்பு -

மாகாணசபை தேர்தல் காலத்தில் சர்வதேசம் அரசியல் தீர்வைப் பெற்றுத் தரும் எனவே எமக்கு வாக்களியுங்கள் என மக்களை ஏமாற்றி வாக்குகளை அபகரித்த கூட்டமைப்பினர், குழு, கோஷ்டி என உட்கட்சிப் பூசலால் திணறிப்போயுள்ள நிலையில் அதனை மூடி மறைப்பதற்காகவே, முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக திருகோணமலையில் தமது கோஷ்டிகளைக் கூட்டி, தமிழர்கள் பிரச்சினையை ஆராய எட்டுப்பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாகத் தெரிவித்து மறுபடியும் மக்களை ஏமாற்றத் துணிந்துள்ளனர் என பருத்தித்துறை பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி இணைப்பாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.

உலக உழைப்பாளர் தினமான நேற்று பருத்தித்துறை நகர கொட்டடி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் சபாரட்ணம் சுகிர்தராஜா தலைமையில் இடம்பெற்ற சங்கத்தின் மாதாந்த பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவி;த்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறு சங்கத்தின் மாதாந்த பொதுச்சபைக் கூட்டத்தைக் கூட்டி  அங்கத்தவர்களின் கருத்துகளைப் பெற்றுத் திட்டங்களை வகுத்துச் செயற்படுவதன் ஊடாக சங்க அங்கத்தவர்களின் பொருளாதார நிலையை உயர்த்த சந்தர்ப்பங்களும் அத்துடன் அவர்களின் தொழில் ரீதியாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் காண முடியுமென நம்புகின்றேன்.

கடந்த 2001ம் ஆண்டு எமது கட்சியின் செயலாளர் நாயகமமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இச்சங்கத்தின் கட்டிடத்திற்கான நிதியை வழங்கியிருந்தார். அதற்கான அடிக்கல்லையும் அன்று நானே நாட்டி வைத்தேன். அது இன்று இச்சங்கத்தின் முழுமையான சொத்தாகியுள்ளது. எமக்கு அதிகாரங்களும் வாய்ப்புக்களும் கிடைத்த சந்தர்ப்பங்களை மக்களின் நலன்களுக்காகவே பயன்படுத்தினோம். ஆனால் தற்போது வடக்கு மாகாணசபை அதிகாரத்தில் உள்ள கூட்டமைப்பினர் வாக்களித்த மக்களுக்கு கடந்த ஆறு மாத காலத்தில் எதனைச் செய்தார்கள்? தற்போது திடீரென விழித்தெழுந்துபோல் தமிழர்கள் பிரச்சினையை ஆராய குழுவை அமைப்பதாக் கூறுகின்றார்கள். கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட வாக்குறுதிகளுக்கு என்னானது? உண்மையில் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள கோஷ்டி செயற்பாடுகளை வெளியில் தெரியாதவாறு மூடி மறைப்பற்காகவே இவ்வாறு நாடகமாடுகின்றனர். திருமலைக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு கூட்டமைப்பின் கோஷ்டியினருக்கும் அங்கு என்ன நடந்தது, திருமதி எழிலன் அனந்தி எதற்காக அழுதுகொண்டு கூட்டத்திலிருந்து வெளியேறினார் என்பதும் தெரியும். இந்த இலட்சணத்தில் தமிழர்கள் பிரச்சினையை ஆராய எட்டுப்பேர் கொண்ட குழுவை அமைத்தாகக் கூறி  மீண்டும் மக்களை ஏமாற்றத் துணிந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் கரையோர இணைப்பாளர் பிரான்சிஸ் ரெட்ணகுமார் வடமராட்சி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் வைத்திப்பிள்ளை அருள்தாஸ் அவர்களும் கலந்து கொண்டார்.   

«
Next
Newer Post
»
Previous
Older Post