Slider

Blog links

Featured Posts Coolbthemes

இலங்கைச் செய்திகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

விந்தை உலகம்

தீவகச் செய்திகள்

» » » 15 வயது மாணவியுடன் 30 வயது ஆணுக்கு காதல். லீலைகளில் ஈடுபட்ட போது சிக்கினர்.

அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயது மாணவியுடன் மட்டக்களப்பு முத்துவாரம் கல்குடா பகுதியில் காதல் லீலைகளில் ஈடுபட்ட 30 வயது காதலனுக்கு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.





மட்டக்களப்பு கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது மாணவி அதே பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் ஒருவருடன் ஏற்பட்ட காதலையடுத்து மாணவியை பெற்றோர் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்க வைத்து பாடசாலை ஒன்றில் கல்வி கற்பதற்கு சேர்த்து விட்டனர்.


இந்நிலையில் குறித்த மாணவி கடந்த புதன்கிழமை காலை 7.00 மணிக்கு பாடசாலை செல்வதாக விடுதியில் இருந்து வெளிவந்து காதலனுடன் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த போது இடையில் நண்பர் ஒருவரின் வீட்டில் பாடசாலை சீருடையை மாற்றிவிட்டு மட்டக்களப்பு முகத்துவாரம் கடற்கரைக்குச் சென்று காதல் லீலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மட்டக்களப்பு மாநகர பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.


இச்சம்பவத்தில் கைது செய்ப்பட்டவர்களை நேற்று வியாழக்கிழமை காலையில் அக்கரைப்பற்று பொலிசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் காதலனை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி. அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆஜர்படுத்திய போது இவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

«
Next
Newer Post
»
Previous
Older Post