Slider

Blog links

Featured Posts Coolbthemes

இலங்கைச் செய்திகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

விந்தை உலகம்

தீவகச் செய்திகள்

» » » » சுன்னாகத்தில் இறந்தவரின் சடலம் இனம்காணப்பட்டது.


   

நேற்றுமுன் தினம் திங்கள் கிழமை மதியம் சுன்னாகம் மேற்கு மூர்த்தியான் கூடல் வயல் வெளி கிணற்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட சடலம் இனம் காணப்பட்டுள்ளது.



தெல்லிப்பளை பளை என்னும் இடத்தில் இருந்து இடம் பெயர்ந்த உடுவில் பகுதியில் வாழும் முதியவரான வைரமுத்து வெற்றிவேலு வயது 77 என்பவருடையது என மகனினால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் இவரைக் காணவில்லையென தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.



தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டவர் வீடு திரும்பவில்லையெனவும் தெரிவித்துள்ளார். மல்லாகம் நீதிமன்ற நீதிபதியின் விசாரனையைத் தொடர்ந்து சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக சுன்னாகம் பொலிசாரினால் ஒக்படைக்கப்பட்டுள்ளது.

யாழ் நிருபர்.

«
Next
Newer Post
»
Previous
Older Post