Slider

Blog links

Featured Posts Coolbthemes

இலங்கைச் செய்திகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

விந்தை உலகம்

தீவகச் செய்திகள்

» » » நெடுந்தீவு பிரிமிய லீக் கிரிக்கெட் ஈகிள் விளையாட்டு அணி வெற்றி




நெடுந்தீவு பிரதேச மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டுத் துறையை வளர்த் தெடுக்கும் முகமாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நெடுந்தீவு பிரிமிய லீக் கிரிக்கெட்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நெடுந்தீவு பிரதேசத்திறக்கு உட்பட்ட கழகங்களின் முன்னனி வீரர்கள் ஒன்றினைக்கப்பட்டு அனுசரனையாளர்களின் ஊக்குவிப்புடன் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டி ஆட்டத்தில் ஈகிள் விளையாட்டு அணி வெற்றி பெற்று டிபிஎல் வெற்றிக் கிண்ணத்தை பெற்றுக் கொண்டது.

நெடுந்தீவு பொது விளையாடடு மைதானத்தில் நடை பெற்ற இறுதிப்போட்டியில் சன்ரைஸ் விளையாட்டுக் கழகமும் ஈகிள் விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன.

முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைஸ் விளையாட்டுக் கழகம் 10 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 64 ஓட்டங்களை பெற்றது. எ.பபிக்குமார் 23 சகாஜெனிஸ் 16 ஓட்டங்களை பெற்றனர்.

ஈகிள் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த எ.அன்ரனிதாஸ் 02 ஓவர்கள் பந்து வீசி 10 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்கள்

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஈகிள் விளையாட்டுக் கழகம் 8.3 ஓவர்களில் 04 விக்கெட்டுக்களை இழந்து 65 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

ஜே.நிசாந்தன் 19 ந.டிலான் 15 எ.கொன்சன் 14 ஓட்டங்களை பெற்ன்ர்.

சன்ரைஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த எ.பபிக்குமார் 02 ஓவாகள் பந்து வீசி 11 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.

போட்டியின் தொடர் ஆட்டநாயகனாக சன்ரைஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த எ பபிக்குமார் ஆறு விக்கெட்டுக்களையும் 93 ஓட்டங்களையும் பெற்றமைக்காக தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியில் சம்பியன் அணிக்கு பத்தாயிரம் ரூபா பணப்பரிசும் வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட்துடன் இரண்டாம் இடத்pதை பெற்ற அணிக்க ஐயாயிரம் ரூபா பணப்பரிசும் வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட்டன.




«
Next
Newer Post
»
Previous
Older Post