பதுளை, தெமோதர பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்தவர்கள் பதுளை மற்றும் பண்டாரவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பயணிகளை ஏற்றிய பஸ் ஒன்று பதுளை, தெமோதர- ஹல்ல ஹல்பே என்ற இடத்தில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பதுளையில் இருந்து பண்டாரவளை நோக்கி சென்ற பயணிகள் பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.