கடுகண்ணாவ பிரதேசததிலுள்ள பிரசித்தி பெற்ற ஹோட்டலொன்றில் நேற்று இடம்பெற்ற மாணிக்கக் கற்கள் ஏல விற்பனையின் போது 25 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
நேற்று மதியம் 12.20 மணியளவில் ஏல விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கையில் மாணிக்கக் கற்களை கொள்வனவு செய்ய வந்திருந்த இருவர் பெறுமதியான ஒன்பது மாணிக்கக் கற்களை கொள்ளையடித்துக் கொண்டு ஜீப் வண்டியிலேறி தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து மாணிக்கக் கல் கொள்வனவாளர்களை அழைத்து வந்திருந்த முகவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளையடிக்கப்பட்ட ஒன்பது மாணிக்கக் கற்களின் பெறுமதி 25 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் அந்த கற்களின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கொள்ளையிடப்பட்ட மாணிக்கக் கற்களுடன் தப்பியோடிய இருவரும் தமக்குத் தெரிந்தவர்கள் என கைது செய்யப்பட்டுள்ள முகவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கொள்ளையர்கள் இருவரும் மாணிக்கக் கற்கள் ஏல விற்பனை நடவடிக்கைகளின் போது துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியே துணிகரமான இத்திருட்டை மேற்கொண்டுள்ளனர்.
இவர்களைக் கைது செய்வதற்கான சகல நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன், மாவனல்லை பொலிசாரின் தலைமையில் இதற்கென எட்டு விசேட குழுக்களும் நியமிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டுள்ளன.
Slider
Blog links
Featured Posts Coolbthemes
இலங்கைச் செய்திகள்
இந்தியச் செய்திகள்
உலகச் செய்திகள்
சினிமா செய்திகள்
விந்தை உலகம்
தீவகச் செய்திகள்
Tamil Karaokes's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Popular Posts
-
காமம் ஒரு மனிதனை எந்த அளவு ஆட்டிப் படைக்கின்றது என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது அச்சுவேலி முக் கொலைச் சம்பவம். சினிமாப் படங்கள், தொலைக்காட்...
-
பருத்தித்துறை தும்பளை நெல்லண்டை பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த வெளிமடை மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புமற்றும் 03.05.2014 ல் நடைபெற்ற பருத்தித்துறை தும்பளை நெல்லண்டை பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த வெளிமடை மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு
-
யாழ்.மாநகர சபையில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வந்துள்ள 87 பணியாளர்களுக்கு இன்றைய தினம் (28) நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன. முன்னுரிமை...
-
மூக்குத்தி குத்திக் கொள்வதால் பெண்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்...
-
தேர்தல் விதிகளை மீறியதாக குஜராத்தில் அந்த மாநில முதல்வரும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள...
-
ஒரு ஆண் எத்தனை பெண்களையும் திருமணம் செய்ய அனுமதி- கென்யாவில் புதிய சட்டம்! ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ள அனுமத...
-
சூர்யா ‘அஞ்சான்’ படம் முடிந்ததும் வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் ப...
-
வடமாகாண முதலமைச்சரே ஜனாதிபதி பொது வேட்பாளர் நிலைக்கு தகுதியானவர். அவரை பொது வேட்பாளராக தெரிவு செய்வதன் மூலம் எதிர்க கட்சிகளின் பொது வேட்பாளர...
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு மற்றும் கிராண்குளம் ஆகிய பிரதேசங்களிலுள்ள குடும்பங்...
-
கனடாவில் ஆபாச நடிகையாக இருந்து பாலிவுட்டின் முன்னணி நடிகையாக மாறிய நடிகை சன்னிலியோன் குறித்த சர்ச்சைக்குரிய செய்தி ஒன்று டுவிட்டரில் வெளியான...
