Slider

Blog links

Featured Posts Coolbthemes

இலங்கைச் செய்திகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

விந்தை உலகம்

தீவகச் செய்திகள்

» » » கூட்டமைப்பு கட்சியா? இல்லையா? நாளை முடிவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்வதா, இல்லையா என்பது உட்பட வடக்கு, கிழக்கின் சமகால நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடி முடிவெடுப்பதற்காக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பியின் தலைமையில் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நாளை மாலை 4 மணிக்கு ஆரம்பமாகும் இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொள்வர் என அவர் குறிப்பிட்டார். மேற்படி கூட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகளின் தற்போதைய நிலைவரங்கள், கூட்டமைப்பின் வெளிவிவவாரக் கொள்கைளைக் கையாள்வது எப்படி?, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்வதா? இல்லையா? ஆகியவை உட்பட வடக்கு, கிழக்கின் சமகால நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என்று சுரேஷ் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

«
Next
Newer Post
»
Previous
Older Post