அச்சுவேலி கதிரிப்பாய்பகுதியில் ஜே/212 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வசித்த குடும்பம் ஒன்றை வாளால் வெட்டி கொலை செய்துள்ளனர்.
இன்று (04) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் அக்குடும்பத்தை சேர்ந்த நிக்கோநாதன் அருள்நாயகி(50), யாசோதரன் மதுசா(27), நிக்கோநாதன் சுபாங்கன்(19) கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவா்களுடன் நிற்குணாந்தன் தர்மிகா (வயது25), யாசோதரன் வேலன் (வயது 30) ஆகியோர் படுகாயத்துக்குள்ளாகியுள்ளானர்.
இன்று அதிகாலை இடம்பெற்ற இக் கொலை சம்பவமானது குடும்பத்தாகரறின் விளைவாக ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இந்த கொலைச்சம்பவம் யாழ்ப்பாணத்தை பயத்தில் உலுக்கி எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்தில் வீட்டிலிருந்த 3 வயதுக் குழந்தை எவ்விதமான உயிராபத்துகளும் இன்றி தப்பித்துள்ளது..

முக்கொலை சந்தேகநபர் கைது : கொலை புரிந்துவிட்டு வெளிநாடு செல்ல ஆயத்தம்???
யாழ். அச்சுவேலியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த மூவர் இன்று (04) அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இன்று (04) காலை கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, தம்மிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் இந்த முக்கொலைக்கு பயன்படுத்தப் பட்டதாக கூறப்படும் முச்சக்கர வண்டியொன்றினை மீட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.
நவக்கிரி என்னும் இடத்தில் இருந்து மீட்கப்பட்ட இந்த முச்சக்கரவண்டியினுள் பெருமளவு இரத்தக்கறைகள் இருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தர்மிகாவின் கணவரான தனஞ்செயன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கொலைகள் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபரே கொலைகளுக்கு காரணம் என தெரியவந்ததினையடுத்து, ஊரெழுப் பகுதியில் குறித்த நபர் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டார்.
அச்சுவேலி காதரிப்பாய் பகுதியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (04) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் நிக்குநானந்தன் அருள்நாயகி (50), யாசோதரன் மதுசா (27), நிக்குநானந்தன் சுபாங்கன் (19) ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளதுடன், தனஞ்செயன் தர்மிகா (25), க.யசோதரன் (30) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவத்தில் வீட்டிலிருந்த 3 வயதுக் குழந்தை மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்படவில்லை.
இந்தக் கொலை தொடர்பாக அயலவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
தர்மிகா திருமணமாகி ஒரு பிள்ளையின் தயாராவர். இவர் தனது கணவனுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரை விட்டுப் பிரிந்து பிள்ளையுடன் தனது தாய் சகோதரர்களுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது கணவன் இவர்களது வீட்டுக்கு வந்து வீட்டில் உள்ளவர்களுடன் முரண்பட்டதுடன் உங்கள் அனைவரையும் வெட்டிக் கொல்லுவேன் என கூறிச்சென்றதாகவும், அதன் பின்னரே இக்கொலைகள் இடம்பெற்றுள்ளதால், அவரே இக்கொலைகளை செய்திருக்கலாம் என அயலவர்கள் சந்தேகம் தெரிவித்தனர்.
அதேவேளை சந்தேகிக்கப்படும் நபர் வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே செய்திருந்ததாகவும் இன்னும் ஒரிரு தினங்களில் வெளிநாடு செல்ல இருந்த நிலையிலையிலேயே இக்கொலைகளை செய்து விட்டு தப்பி செல்ல திட்ட மிட்டு இருந்திருக்கலாம் என அயலவர்கள் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

