Slider

Blog links

Featured Posts Coolbthemes

இலங்கைச் செய்திகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

விந்தை உலகம்

தீவகச் செய்திகள்

» » » தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்து வரும் கூட்டமைப்பு மிகவிரைவில் பொறுப்புக்கூற வேண்டும்-கஜேந்திரகுமாா் பொன்னம்பலம்.



புலம் பெயர் தமிழர்களிடமிருந்து அந்நியப்பட்டுள்ளது போன்று ஈழத்தமிழர்களிடமிருந்தும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை அந்நியப்படுத்துவதோடு தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்து வரும் கூட்டமைப்பை இந்த மண்ணிலிருந்து அகற்றவேண்டும் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி-அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் இணைந்து நடத்திய மே தின நிகழ்வு 01.05.2014 கரவெட்டியில் பேரணியுடன் இடம்பெற்றது .இதன்போது இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவா் மேலும் தெரிவிக்கையில்,

எமது கட்சி தமிழ்மக்களுக்காக செய்யும் சகல நடவடிக்கைகளும் முற்று முழுதாக மழுங்கடிக்கப்பட்டு தகவல்கள் மறைக்கப்பட்டு வருகின்றன.ஆனால் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு மிக விரைவாக சென்றடைகின்றது. இணையத்தளங்களை அவர்கள் அதிகம் பார்ப்பதனாலும் இணையத்தளங்கள் எமது செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து வருவதனாலும் புலம் பெயர் தமிழர்களிடம் கூட்டமைப்பு நிதி பெற முடியாமல் திண்டாடுகிறது.

இந்நிலை விரைவில் ஈழத்திலும் உருவாகும் மக்களிடம் வாக்குகளைப்பெறமுடியாமல் கூட்டமைப்பு திண்டாடும் காலம் மிகவிரைவில் உருவாகும் இந்த மண்ணிலிருந்து எமது இனத்தை அழிக்கும் நடவடிக்கைகளுக்கு துணைபோகும் கூட்டமைப்பு மக்களுக்கு இழைத்த துரோகங்களுக்கு மிகவிரைவில் பொறுப்புக்கூறவேண்டிவரும்.

கடந்த 2013 ஆம் அண்டு மேதினம் இதே மண்ணில்; நடத்தினோம். வித்தியாசமான காலகட்டத்தில் அந்த மே தினத்தை நடத்தினோம் அன்றைய தினம் தமிழர் தாயகத்தில் இடம்பெறவுள்ள எதிர்கால சதி முயற்சிகள் பற்றியும் கூறியிருந்தேன்.

மாகாணசபை முறைபற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் கூறியிருந்தேன்.அத்தோடு செத்துப்போன, அழிந்து போன அரசியல் முறைக்கு உயிர்கொடுத்து இலங்கை அரசு முயற்சிக்கிறது அதை சர்வதேச நாடுகளும் ஏற்றுக்கொள்ளுமாறு கூறிக்கொண்டு இருக்கும் போது தான் கடந்த மே தினம் இடம்பெற்றது.

ஆனால் இந்தத்தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்திருந்த கூட்டமைப்பு தாம் இதனை முழுமையாக ஏற்றும் கொண்டுள்ளோம் என்று கூற முடியாத நிலையில் உள்ளதாக கூறியிருந்தது. அதேவேளை 13 ஆவது திருத்தசட்டதிற்கு அமைய உருவாக்கப்பட்ட மாகாணசபையை நாம் எடுத்த எடுப்பில் நிராகரிக்காமல் போட்டியிட்டு நிராகரிக்க வேண்டும் என்று கூறியது .

இருப்பினும் எமது கட்சி இதனை முற்று முழுதாக நிராகரித்ததோடு சர்வதேச ரீதியாக 13 ஆவது திருத்த சட்டத்திற்கு அமைய உருவாக்கப்பட்ட மாகாண சபையை தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக திணித்து விடுவார்கள் என்றும் கட்சி அரசியலாக திட்டமிட்டு மாற்றப்படும் என்று கூறினோம்.

அன்று நாம் கூறியது இன்று நடைமுறைக்கு வந்துள்ளது. ஜ.நா. தீர்மானம் தமிழ்த்தேசத்திற்கு விடிவு கிடைத்து விட்டது அல்லது தமிழ்மக்களுக்கு தீர்வு வழங்கப்பட்டுவிட்டது என்ற நிலையில் இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தான் தீர்மானம் உள்ளது. அதன் வெளிப்பாடாக தான் இன்றும் பல ஆபத்துக்களை தமிழ்மக்கள் அனுபவிக்கின்றார்கள்.

இந்நிலையில் ஒவ்வொரு தமிழ் மகனும் ஆவலோடு எதிர்பார்க்கும் அரங்காக மாறியுள்ள ஐ.நா மனித உரிமை அமர்வோடு எமது தமிழ்மக்களின் உரிமைகள் முடக்கப்பட்டுவிட்டது. கடந்த 2012 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது நாம் அதன் குறைபாடுகளை சுட்டிக்காடிய போது த.தே.கூ ஆதரித்தது அதனை மக்கள் அங்கி கரித்து விட்டதாக கருதி சர்வதேசமும் அங்கி கரித்து தீர்மானத்தை நிறைவேற்றி விட்டது. சாதகமான விளைவுகள் அத்தீர்மானம் ஊடாக ஏற்படும் என்று கூறியிருந்தனர்.

முதலாவது தீர்மானத்தின் பின்னர் தமிழர்பிரதேசத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதா இல்லை மாறாக பின்னடைவுகள் தான் ஏற்பட்டது. அந்தத்தீர்மானத்தின் பல முற்னேற்றகரமான அம்சங்கள் உள்ளது அதை நாம் ஆதரிக்கின்றோம் என்றனர் இப்போது மூன்றாவது தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்திற்காக 47 நாடுகளுக்கு கடிதம் எழுதியதாகவும் அக் கடிதம் தான் இத்தீர்மானத்திற்கு காரணம் என்றும் கூட்டமைப்பின் தலைவர் கூறினார். மக்கள் வாக்களித்து தெரிவு செய்த கட்சி என்பதனால் கூட்டமைப்பின் கருத்தை ஏற்று தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. இது அமெரிக்க தீர்மானமல்ல தமிழ்மக்களின் பெயரைப்பயன்படுத்தி கூட்டமைப்பு கொண்டுவந்த தீர்மானம்.

இந்தத்தீர்மானத்தில் தமிழா்கள் பற்றி எதுவுமே கூறப்படவில்லை. தமிழ் என்ற சொல் பாவிக்கப்படவேயில்லை என்றும் அப்படிபட்ட தீர்மானத்தையே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வலியுறுத்தியது என்று அரசாங்கத்துடன் இணைந்து தமிழினத்தை கூட்டமைப்பு அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறினாா்தமிழ்த்தேசத்தை இல்லாதொழிக்கும் அரசின் சகல நடவடிக்கைளும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்

மே தின நிகழ்வில் த.தே.ம.முன்னணி வலியுறுத்தல்



தமிழ்த்தேசியமக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இனைந்து நடத்திய தொழிலாளர் தின நிகழ்வு 02.05.2014 பிற்பகல் கரவெட்டி சாமியன் அரசடி ஞானவைரவர் முன்றலில் இடம்பெற்றது.

இதில் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அக்கட்சின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்லராஜா கஜேந்திரன் , அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸின் தலைவர் ஆர்.ஆனந்தராஜா மற்றும் அக்கட்சிகளின் உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப்பலர் பங்கு கொண்டிருந்தனர்.

இந்த மே தின நிகழ்வில் தமிழர் தயாகப்பிரதேசங்களில் தொழிலாளர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் தமிழர் தேசயத்தையும் தமிழினத்தையும் அழிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைள் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக பேச்சாளர்கள் வலியுறுத்தியிருந்தனர்;

தமிழ்மக்கள் அடிமைகளாகவே உள்ளனர் எமது மக்களின் வாக்குகளைப்பெற்ற கூட்டமைப்பு அரசுடன் இணைந்து செயற்படுவதோடு தமிழ்மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு துணைபோகின்றது என்றும் குற்றச்சாட்டியிருந்தனர்.

«
Next
Newer Post
»
Previous
Older Post