கடுமையான பயிற்சி ஆட்ட யுக்தி பயிற்சியாளரின் ஆலோசனை ரசிகர்களின் ஊக்குவிப்பு என பல்வேறு காரணிகள் ஒரு அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது பருத்தித்துறை பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி அமைப்பாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.
பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக் அனுமதியுடன் அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக் கழகம் நடாத்திய உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை (2014.05.04) பிற்பகல் 4.30 மணியளவில் அல்வாய் நண்பர்கள் விளையாட்டரங்கில் தலைவர் திரு இ.குகதாஸ் தலைமையில் இடம்பெற்றது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும் போதே
மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இங்கு பேசிய விளையாட்டுக்
கழகத்தின் தலைவர் திரு இ.குகதாஸ் அவர்கள்ää வலிகாமத்தில் நான்கு பிரதேச செயலர் பிரிவுக்கு ஒரு வலிகாமம் லீக் மட்டும் உள்ளது அதில் நூறுக்கு மேற்பட்ட கழகங்கள் உள்ளது எனவும் வடமராட்சியில் மூன்று பிரதேச செயலர் பிரிவை அடக்கிய வடமராட்சி லீக் பருத்தித்துறை
கரவெட்டி என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது என தனது வருத்தத்தைத் தெரிவித்ததுடன் நிதியுதவியும் கோரியிருந்தார். தற்போது வடக்கு மாகாணசபை இயங்குகிறது. மாகாணசபை உறுப்பினர் திரு வே.சிவயோகன் இங்கு உள்ளார். அவர் தலைவர் அவர்களின் கோரிக்கையை செவிமடுத்திருப்பார்
என நம்புகின்றேன். எனவே மாகாணசபை அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். விளையாட்டுத்துறையை வளர்க்க மாகாணசபை ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கம்பர்மலை பங்கம்பன்ஸ் விளையாட்டுக ;கழகம் மோதிக்கொண்டது. இதில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் கேடயத்தை தட்டிச் சென்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு வேலுப்பிள்ளை சிவயோகன் அவர்களும்
திக்கம் இராணுவப் பொறுப்பதிகாரி அவர்களும் கலந்து கொண்டார்.
ஒரே மேடையில் ஈ.பி.டி.பி --- ரி.என்.ஏ!
Tag: breaking news Srilanka





