Slider

Blog links

Featured Posts Coolbthemes

இலங்கைச் செய்திகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

விந்தை உலகம்

தீவகச் செய்திகள்

» » காஞ்சிபுரத்தில் இலங்கை பெண் அடித்துக் கொலை

தமிழ்நாடு – காஞ்சிபுரம் அருகே இலங்கை பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவம் கிராமத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அருகே வையாவூர் பாரதிநகரில் வசிப்பவர் பூமணி. இவர் நந்தம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றுகின்றார்.

இவரது மனைவி புனிதவதி (44). இவர்கள் கடந்த 30 வருடத்துக்கு முன் இலங்கையில் இருந்து அகதிகளாக வந்தவர்கள். இவர்களது மகள் அம்சத்துவானி (17). 10ம் வகுப்பு படிக்கிறாள். மகன் இறையன்பு, பொறியியல் முடித்துவிட்டு திருச்சியில் வேலை செய்கிறார்.

மற்றொரு மகன் தினேஷ்குமார் (19) பிளஸ் 2 படித்து வருகிறான். நேற்றிரவு 7 மணி அளவில் புனிதவதி, அந்த பகுதியில் உள்ள தனது அக்கா சுசீலா வீட்டுக்கு சென்றார்.

இதன்பிறகு நள்ளிரவு ஆகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து மனைவியை தேடி சுசீலா வீட்டுக்கு பூமணி சென்றார். அங்கிருந்து புனிதவதி கிளம்பிவிட்டது தெரிந்தது.

இதையடுத்து புனிதவதியை பல இடங்களில் தேடி அலைந்தனர். ஆனால் அவரை பற்றி தகவல் இல்லை.

இந்நிலையில், தனது வீட்டின் பின்புறம் உள்ள ஏரிக்கரை புதரில் பலத்த காயத்துடன் புனிதவதி இறந்துக் கிடந்தது பார்த்து குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலை பார்த்து பூமணி கதறி துடித்தார்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் காஞ்சிபுரம் தாலுகா பொலிஸ் பொறுப்பதிகாரி மாதவன் சம்பவ இடத்துக்கு விரைந்தார்.

புனிதவதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். உருட்டுக்கட்டையால் அடித்து புனிதவதி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார், புனிதவதியை கொன்றது யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று விசாரிக்கின்றனர்.

மேலும் கொலை தொடர்பாக அவரது கணவர் பூமணி மற்றும் நெருங்கிய உறவினர்களிடம் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வையாவூரில் பீதியை ஏற்படுத்தி கிளப்பியுள்ளது.

«
Next
Newer Post
»
Previous
Older Post