நாக்கை பிளேடால் அறுத்து சிவபெருமானுக்கு காணிக்கை செலுத்திய 17 வயது இளைஞன். அதிர்ச்சி புகைப்படங்கள்
நாக்கை பிளேடால் அறுத்து சிவபெருமானுக்கு காணிக்கை செலுத்திய அதிர்ச்சி சம்பவம் ஒன்று இந்தியாவில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள மகாதேவ்கர்ஹா கோவிலிலுக்கு நேற்று வந்த 17 வயது Lalmohan Soren என்பவர் திடீரென கோவிலில் உள்ள சிவபெருமான சந்நிதியில் முன்னால் பிளேடு ஒன்றை எடுத்து திடீரென தனது நாக்கை அறுத்து காணிக்கை செலுத்தினான்.
அந்த இளைஞனுக்கு பக்கத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் அலறினர். உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்ட Lalmohan Sorenக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் மீண்டும் அந்த இளைஞனுக்கு நாக்கை ஒட்ட வைக்க முடியவில்லை.
தற்போது வெறும் திரவ உணவு மட்டும் சாப்பிட்டு வரும் Lalmohan Soren, வாய்பேச முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
Lalmohan Soren குடும்பத்தினர் இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்தாலும், தன்னுடைய மகன் கடவுளுக்கு கொடுத்த காணிக்கையை எண்ணி பெருமைப்படுவதாக கூறினர். சிறுவயதில் இருந்தே தன்னுடைய மகன் பக்தியாக இருந்ததாகவும், சிவபெருமான் மீது அவன் மிகுந்த ஈடுபாடு உடையவன் என்றும் அந்த இளைஞனின் தாயார் Lalmuni Soren அவர்கள் கூறினார்.
Tag: world
