Slider

Blog links

Featured Posts Coolbthemes

இலங்கைச் செய்திகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

விந்தை உலகம்

தீவகச் செய்திகள்

» » பேஸ்புக்கில் 10 கோடி போலி கணக்குகள்.

பேஸ்புக் சமூக வலைதளத்தில் 10 கோடி போலி கணக்கு இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் தான் அதிகம் எனவும் தெரியவந்துள்ளது





உலகம் முழுவதும் உள்ள மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டன சமூக வலைதளங்கள். அதிலும், பேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.





இதில், ஒருநபர் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருப்பது நிபந்தனை மற்றும் விதிமுறையை மீறும் செயலாகும். ஆனால், உலகம் முழுவதும் இந்த விதிமீறல் அதிகரித்து வருவதாக பேஸ்புக் நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது.





கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, ஒன்றுக்கும் மேற்பட்ட டூப்ளிகேட் கணக்கு வைத்திருப்போரின் எண்ணிக்கை உலகம் முழுவதும் 15 சதவீதம் அதிகரித்து, 10 கோடியை தொட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.





மொத்தம் 12.8 கோடி போலி கணக்கு இருப்பதாக பேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில்தான் டூப்ளிகேட் கணக்குகள் அதிகளவில் உள்ளன.





அதே போல, மொபைல் மூலமாக தினசரி பேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 75 கோடியில் இருந்து 34 சதவீதம் அதிகரித்து 100 கோடியாக உயர்ந்துள்ளது.





இந்தியா, பிரேசில், அமெரிக்காவில்தான் அதிகமான மக்கள் மொபைலில் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர்.

«
Next
Newer Post
»
Previous
Older Post