நிரந்தர நியமனங்கள் தொடர்பில் கோரிக்கைகள்
இன்றைய தினம் காலை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும்
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி
அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களது யாழ்.அலுவலகத்தில்
சந்தித்த பல்வேறு துறைசார்ந்த பணியாளர்கள் தங்களது நிரந்தர
நியமனங்கள் தொடர்பில் கோரிக்கைகள் முன்வைத்தனர்.
இதன்பிரகாரம் தொல் பொருள் திணைக்களம் யாழ்.மாநகர சபையின்
கீழான தீயணைப்புப் படை மற்றும் ஏனைய பிரிவுகள் சிறைச்சாலைகள்
மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி போன்ற துறைகள் சார்ந்து
பணியாற்றி வரும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தங்களது
நிரந்தர நியமனங்கள் தொடர்பிலான கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இவர்களது கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ள அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா அவர்கள் உரிய தரப்பினருடன் கலந்துரையாடியும் அமைச்சரவைப்
பத்திரங்கள் சமர்ப்பித்தும் இவர்களது பணி நிரந்தரம் குறித்து நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.
இதனிடையே வலிகாமம் வடக்கு மாவை கலட்டி பகுதியின் உட்கட்டமைப்பு வசதிகளை
மேற்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன் அதற்கான நடவடிக்கைகளை
மேற்கொள்வதற்கான பணிப்புரைகளை உரிய தரப்பினருக்கு அமைச்சர்
அவர்கள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
பணி நிரந்தரம் குறித்து கோரிக்கை
Tag: Sri lanka news Srilanka


