
இராணுவச் சிப்பாய்களைக் கொண்டு கணவரைக் கொலை செய்த மனைவி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குருணாகல் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கணவரை படுகொலை செய்வதற்காக இருபது லட்ச ரூபா பணத்தை இராணுவச் சிப்பாய்களுக்கு வழங்கியுள்ளார்.
குருநாகல், வெல்லாவ பிரதேச நெலியா கிராமத்தில் கடந்த மார்ச் மாதம் 8ம் திகதி 37 வயதான ஜனக பிரியந்த என்ற செல்வந்த வர்த்தகர் கொடூரமான முறையில் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
கொலையுண்டவர் மனைவியுடன் கோபித்துக்கொண்டு தனியே வாழ்ந்த வந்தார்.
வெளிநாடு சென்று திரும்பிய குறித்த நபரின் மனைவி ஏக்கர் கணக்கான தெங்கு காணியை விற்பனை செய்யுமாறு கோரியுள்ளார். எனினும், இதற்கு கணவர் இணங்கவில்லை.
இதனால் ஆத்திரமுற்ற மனைவி கொக்காவில் இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் இரண்டு படைச் சிப்பாய்களின் ஒத்துழைப்புடன் கணவரை கொலை செய்துள்ளார்.
உறவினரான படைச் சிப்பாய் ஊடாக குறித்த இரண்டு படைச் சிப்பாய்களின் அறிமுகம் கிட்டியுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய பெண் மற்றும் இராணுவச் சிப்பாய்கள் அனைவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவச் சிப்பாய்களைக் கொண்டு கணவரைக் கொலை செய்த மனைவி
Tag: Sri lanka news