இராணுவ டிரக் விபத்துக்குள்ளானது. 07 படைச் சிப்பாய்கள் காயம்.
தம்புள்ளையில் இராணுவ டிரக் விபத்துக்குள்ளானது. 07 படைச் சிப்பாய்கள் காயம்.
தம்புள்ளை, புலகல பகுதியில் இன்று அதிகாலை இராணுவ டிரக் ஒன்று பாதையை விட்டு விலகிச் சென்று கித்துள் மரமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதில் குறைந்தபட்சம் 07 படைச் சிப்பாய்கள் காயமடைந்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரத்துடன் டிரக் மோதியபோது, மரம் முறிந்து டிரக்கின் மீது விழுந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
யாழ்ப்பாணம், சுண்டிக்குளம் இராணுவச் சோதனைச் சாவடியிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த டிரக்கே இவ்வாறு விபத்திற்குள்ளானது.
இவ்விபத்தில் காயமடைந்த சிப்பாய்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் கூறினர்.
Tag:
