பொதுபலசேனா, ராவணா சக்தி அமைப்புக்களின் பௌத்த குருமாரை கைது செய்ய வேண்டுமென போர்க்கொடி உயர்த்துவோர் ஏன் இலங்கைக்கு எதிராக செயற்படும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பை கைது செய்யுமாறு வலியுறுத்துவதில்லையென கேள்வியெழுப்பும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க பயங்கரவாதத்தை ஒழித்தது போன்று சம்பந்தன், விக்கினேஸ்வரனின் தமிழ் இனவாதத்தையும் ஒழிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார்.
பத்தரமுல்லையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், யுத்தத்தில் எமது படையினர் விஷ ஆயுதங்களை பயன்படுத்தி 1,49,000 தமிழ் மக்களை கொன்றார்கள் என்று பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் சர்வதேச நாடுகளுக்கும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் கடிதங்களை அனுப்பினார்.
டேவிட் கமரூன் யாழ்ப்பாணம் சென்றபோது பாதிரிமாரையும், மக்களையும் ஒன்றுதிரட்டி இலங்கைக்கு எதிராக கருத்துக்களை வெளியிடச் செய்தவரும் இவரே ஆவார்.
இவ்வாறு நாட்டின் சட்டங்களையும் அரசியலமைப்பையும் மீறி துரோகம் செய்யும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பை கைது செய்ய வேண்டுமென எவரும் குரல் கொடுப்பதில்லை.
அதற்காக ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதுமில்லை. இராயப்பு ஜோசப்புக்கு எதிராக சட்டம் இயங்குவதில்லை. ஆனால் பௌத்த குருமார் ஆர்ப்பாட்டம் நடத்தினால் கூட்டம் நடத்தினால் கைது செய்யப்படுகின்றார்கள். நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்படுகின்றது.
பொதுபல சேனா, ராவணா பலய பௌத்த குருமாருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறும் கைது செய்யுமாறும் வலியுறுத்துவோர் இராயப்பு ஜோசப்பின் நாட்டை காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளுக்கு மத்தியில் மௌனம் காக்கின்றார்கள்.
கொழும்பில் 2,56,000 தமிழ் மக்கள் வாழ முடியுமானால் ஏன் வடக்கில் சிங்கள மக்கள் வாழ முடியாது? வட மாகாண முதலமைச்சரும் கொழும்பில் தான் வாழ்கிறார். ஆனால் சிங்கள மக்கள் வடக்கில் குடியேற்றப்படும் போது வடக்கில் சிங்கள மயமாக்கல் நடப்பதாக கூறுகின்றார்.
சம்பந்தனும் இதனைத்தான் கூறுகின்றார்.
எனவே பயங்கரவாம் ஒழிக்கப்பட்ட நாட்டில் தமிழ் இனவாதமும் ஒழிக்கப்பட வேண்டும்.
இராயப்பு ஜோசப்பின் நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக கத்தோலிக்க திருச் சபையும், கர்தினால் மெல்கம் ரஞ்சித்தும் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Slider
Blog links
Featured Posts Coolbthemes
இலங்கைச் செய்திகள்
இந்தியச் செய்திகள்
உலகச் செய்திகள்
சினிமா செய்திகள்
விந்தை உலகம்
தீவகச் செய்திகள்
Home
»
Sri lanka news
»
Srilanka
» சம்பந்தன், விக்கினேஸ்வரனின் தமிழ் இனவாதத்தை ஒழிக்க வேண்டும். சம்பிக்க ரணவக்க.
Tamil Karaokes's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Popular Posts
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு மற்றும் கிராண்குளம் ஆகிய பிரதேசங்களிலுள்ள குடும்பங்...
-
ஆறு மாதங்களில் முடியாததை ஆளுநர் 6 நாட்களில் செய்து விட்டார் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல் என்ற வகையில் ஆறு மாதங...
-
யாழ்.மாநகர சபையில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வந்துள்ள 87 பணியாளர்களுக்கு இன்றைய தினம் (28) நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன. முன்னுரிமை...
-
தேர்தல் விதிகளை மீறியதாக குஜராத்தில் அந்த மாநில முதல்வரும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள...
-
வடக்கில் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் பலாத்கார சம்பவங்களுடன் தொடர்புடைய 17 இராணுவச் சிப்பாய்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்...
-
கடந்த 2 தினங்களுக்கு முன்னர் திருகோணமலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயல்குழு கூட்டம் நடைபெற்றது யாவரும் அறிந்ததே. இதில் கலந்துகொண்ட ...
-
ஒரு ஆண் எத்தனை பெண்களையும் திருமணம் செய்ய அனுமதி- கென்யாவில் புதிய சட்டம்! ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ள அனுமத...
-
மத விவகார பிரச்சினைகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட காவற்துறை குழு, சிறுபான்மை மதங்களை அடக்குவதற்காக முன்னெடுக்கப்பட்ட மற்று...
-
அப்பன் என்ற புலி உறுப்பினர், அநுராதபுரத்தில் தங்கியிருந்த போது மேற்படி தபால் ஊழியர் அவருக்கு உதவியதாக பொலிஸார் கூறினர். புலிகள் இயக்கத்துக்க...
-
சூர்யா ‘அஞ்சான்’ படம் முடிந்ததும் வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் ப...
