ஆறு மாதங்களில் முடியாததை ஆளுநர் 6 நாட்களில் செய்து விட்டார் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல் என்ற வகையில் ஆறு மாதங்கள் கடந்த நிலையிலும் வடக்கு மாகாண சபையினால் எந்தவொரு செயற்பாடுகளையும் மேற்கொள்ள இயலாதுள்ள நிலையில் ஆறு மாதங்களில் செய்ய முடியாததை ஆளுநர் அவர்கள் 6 நாட்களில் செய்து முடிந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
தையல் பயிற்சி பெற்ற யாழ்.மாவட்ட யுவதிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் ஆளுநரின் செயலகத்தில் இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்வாறான துரித முயற்சியை மேற்கொண்டு உதவிய ஆளுநருக்கும், ஆளுநரின் செயலாளருக்கும் அமைச்சர் அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல் என்ற நிலைமை வடக்கு மாகாணசபைக்கு
Tag: Sri lanka news Srilanka