வன்னியின் போர் என வர்ணிக்கப்படுகின்ற கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கும்ääமுல்லைத்தீவு புதுகுடியிருப்பு மத்திய கல்லூரிக்கும் இடையில் நடைபெறுகின்ற சிநேகபூர்வ துடுப்பாட்ட போட்டி இன்று(02) கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நன்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகியது.
நான்காவது தடவையாக இடம்பெறுகின்ற 2014 ஆம் ஆண்டுக்கான போட்டியினை பாராளுமன்ற உறுப்பினரும்ääபாராளுமன்றக்குழுக்களின் பிரதிதலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.போட்டியினை ஆரம்பித்துவைத்து வாழ்த்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள்
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த இரு பாடசாலைகளுக்கிடையிலான சிநேகபூர்வ துடுப்பாட்ட போட்டி மாணவர்களிடையே நட்புறவை ஏற்படுத்துவதோடு எங்களுக்கும் மகிழ்ச்சிகை தந்துள்ளது.விளையாட்டு இளைஞர்களுக்கு இடையே நல்ல தலைமைத்துவ பண்பினையும்ääஒற்றுமையையும் வளர்த்தெடுக்கும் எனவே இது போன்ற நிகழ்வுகள் இந்த காலகட்டத்திற்கு அவசியம.;;.கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கொடிய யுத்தத்தினால் பாதிக்ப்பட்டு தற்போது மீள தங்களின் வாழ்க்கையை கட்டியெழுப்பிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் எம்மிடையே இருக்கின்ற வேறுபாடுகளையும்ääபுரிந்துணர்வுமின்னையையும் களையும் நிகழ்வாக நாம் இதனை பார்க்கின்றோம்.
அந்த வகையில் கிளிநொச்சி மகா வித்தியாலயம் மற்றும் புதுகுடியிருப்பு மத்திய கல்லூரி அணி வீர்ர்களை வாழ்த்துகிறேன் விளையாட்டின் வெற்றித்தோல்வி சகஜம் என்ற அடிப்படையில் அமைய வேண்டும் அந்த மன பக்குவம் இந்த வீரர்களிடம் இருப்பது எமக்கு தெரியும் எனவே வீரர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி விளையாட்;டுத்துறையிலும் மிளர வேண்டும் என்றும் கேட்டுகொள்கிறேன். தெரிவித்தார்.
கிளிநொச்சி மகா வித்தியாலய அதிபர் பங்கையற்ச்செல்வன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மகாண சபை உறுப்பினர்களான வை.தவநாதன்ääப.அரியரத்தினம்பளை பிரதேச சபை உறுப்பினர் அன்ரன் அன்பழகன்ääவைத்திய கலாநிதி சத்தியமூர்த்திகிளிநொச்சி மாவட்ட கல்வி அபிவிருத்திகுழு தலைவர் பத்மநாதன் புதுகுடியிருப்பு மத்திய கல்லூரி அதிபர் மற்றும் ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள்ஆசிரியர்கள் மாணவர்கள் படசாலை அபிவிருத்தி சங்கத்தினர்உள்ளிட்;ட பலர் கலந்துகொண்டனர்
வன்னியின் போர் கிளிநொச்சியில் ஆரம்பம்
Tag: Sri lanka news Srilanka


