
பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை வடபிராந்திய தனியார் பேருந்து
உரிமையாளர் சங்கங்களின் ஒன்றியப் பிரதிநிதிகள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக சந்தித்துக்
கலந்துரையாடியுள்ளனர்.
மேற்படி சந்திப்பு கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் பணிமனையில் இன்றைய தினம் (03) இடம்பெற்றுள்ளது.
இதன்போதுää வவுனியாவிலிருந்து புறப்படும் குறிப்பிட்ட சில தனியார் பேருந்துகள் மாங்குளம் கிளிநொச்சி
பரந்தன் சந்தி ஊடாக முல்லைத்தீவு நகரை சென்றடைவதாகவும் இதனால் கிளிநொச்சியிலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும்
பரந்தன் சந்தியூடாக முல்லைத்தீவு நகரை சென்றடையும் பேரூந்து உரிமையாளர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதாக
அமைச்சர் அவர்களிடம் இதன்போது எடுத்து விளக்கப்பட்டது
இதனிடையே மன்னாரிலிருந்து புறப்படும் சில தனியார் பேரூந்துகள் வெள்ளாங்குளம்ää முழங்காவில்ää பூநகரி
பரந்தன் சந்தியூடாக முல்லைத்தீவு நகரை சென்றடைவதாகவும் இதன் காரணமாகவும் சில தனியார் பேரூந்து உரிமையாளர்கள்
சிலர் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் அவர்கள்ää துறைசார்ந்த அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன்
கலந்துரையாடி உரிய தீர்வினைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென தெரிவித்தார்.
இதன்போதுää ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார்ää சில்வேஸ்திரி அலென்ரின்
(உதயன்)ää ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாää வடக்கு மாகாண சபை உறுப்பினர்
தவநாதன்ää யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம்ää கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி
கேதீஸ்வரன்ää அமைச்சரின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி குகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வடபிராந்திய தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்களின் ஒன்றியப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் சந்திப்பு!
Tag: Sri lanka news