கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் மாவட்ட செயலகத்தின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
கிளிநொச்சிக்கு இன்றைய தினம் (03) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் மேற்படி கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்.
ஏ9 வீதிக்கு அண்மையாக நவீன வசதி வாய்ப்புக்களுடன் கூடியதாக புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய மாவட்ட செயலகத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் குறித்த கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டதுடன் அது தொடர்பில் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி கேட்டறிந்து கொண்டார்.
தற்போதுள்ள மாவட்ட செயலகம் பல்வேறு வளப் பற்றாக்குறைகளுடனும் வசதியீனங்களுடனும் இயங்கி வரும் நிலையில் இதன் பௌதீக வளங்களை விஸ்தரித்து நவீன வசதிகளைக் கொண்டமைந்ததாக புதிய மாவட்ட செயலகம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது, ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், அமைச்சரின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி குகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கிளிநொச்சியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் மாவட்ட செயலகத்தின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் பார்வையிடல்
Tag: Sri lanka news Srilanka