சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்று கொண்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்ட 54 பேரும் திருகோணமலை துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு, இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த படகினை கடற்படையினர் மறித்து சோதனையிட்ட போது அவர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்றது கண்டுபிடிக்கப்படது.
அதனைத் தொடர்ந்து குறித்த 54 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 30 ஆண்களும், 11 பெண்களும், 13 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர்கள் திருகோணமலையில் வைத்து மேலதிக விசாரணைகளுக்காக இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை கடைசியாக கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 4ம் திகதி காலிக் கடலில் வைத்து 70 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டமைக்குப் பிறகு இதுவே கைப்பற்றப்பட்ட படகு என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவுக் கடலில் கைதான 54 பேரும் CID யிடம் ஒப்படைப்பு (Photos)
Tag: Sri lanka news Srilanka