Slider

Blog links

Featured Posts Coolbthemes

இலங்கைச் செய்திகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

விந்தை உலகம்

தீவகச் செய்திகள்

» » ஒரு வருட இடைவெளியில் 3வது கணவருக்கு 5வது குழந்தையை பெற்றுத்தரும் மாடல் அழகி.




 வயதான பிரபல மாடல் அழகியும் நடிகையுமான Katie Price, கடந்த ஆகஸ்ட் மாதம்தான் மூன்றாவது கணவருக்கு நான்காவது குழந்தையை பெற்றுத்தந்தார். ஏற்கனவே இரண்டு கணவர்களை விவாகரத்து செய்த Katie Price, கடந்த 2013ஆம் ஆண்டு  Kieran Hayler என்பவரை மூன்றாவது திருமணம் செய்தார். இவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து எட்டு மாதங்களே ஆன நிலையில்  Katie Price மீண்டும் ஐந்துமாத கர்ப்பிணியாக இருக்கின்றார் என்ற தகவல் ஹாலிவுட் படவுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த வாரம் அவர் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மருத்துவமனைக்கு சோதனை செய்ய வந்தபோதுதான் இந்த விஷயம் ஊடகங்களுக்கு தெரிய வந்தது. வரும் ஆகஸ்ட் மாதம் குழந்தை பிறந்துவிடும் என மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன.

தனது மூன்றாவது கணவருக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிரியம். அதனால் அவர் போதும் என்று சொல்லும் வரை குழந்தைகளை பெற்று கொடுத்துக்கொண்டே இருப்பேன் என்று பிரிட்டன் ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். அவரது மூன்றாவது கணவர் எப்போது போதும் என்று சொல்கிறார் என்று தெரியவில்லை என பிரிட்டன் ஊடகங்கள் கிண்டலாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

«
Next
Newer Post
»
Previous
Older Post