Slider

Blog links

Featured Posts Coolbthemes

இலங்கைச் செய்திகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

விந்தை உலகம்

தீவகச் செய்திகள்

» » சென்னை குண்டுவெடிப்பு; தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் பிடிபட்டார், ரகசிய இடத்தில் விசாரணை

சென்னை சென்ட்ரல் ரெயில்நிலையத்தில் கவுகாத்தி ரெயிலில் குண்டு வெடித்தது தொடர்பாக  தொடர்பாக தனியார் ஆஸ்த்திரி ஊழியரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை  சென்ட்ரல் ரெயில்நிலையத்தில் இன்று காலை கவுகாத்தி எக்ஸ்பிரஸ் 9-வது பிளாட்பாரத்துக்கு வந்து சேர்ந்தது. அப்போது  ரெயிலின் முன்பதிவு பெட்டியான எஸ்-4 பெட்டியில் 70-ம் எண் இருக்கை பகுதியில் பயங்கர சத்தத்துடன் ஒரு குண்டு வெடித்தது. அடுத்த வினாடியே அருகில் உள்ள எஸ்-05 முன்பதிவு பட்டியில் உள்ள இருக்கை எண் 30லும் பயங்கர சத்தத்துடன் மற்றொரு குண்டு வெடித்தது. இந்த இரட்டை குண்டு வெடிப்பில் ஒரு இளம்பெண் பலியாகினர்.

இதையடுத்து  தமிழக போலீசாரும், ரெயில்வே போலீஸ் மற்றும் ரெயில்வே பாதுகாப்புபடை உஷார்படுத்தப்பட்டனர். பாதுகாப்பு படையினர் ரெயிலில் சோதனை நடத்தினர். பாதுகாப்பு படையின் ஒரு பிரிவினர் குண்டு வைத்த சதிகாரர்கள் பற்றி உடனே விசாரணையில் இறங்கினார்கள். சென்னையில் நேற்று பாகிஸ்தான் உளவாளியை பிடித்த போலீசார் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னையில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினார்கள். அப்போது  ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் பிடிபட்டார்.

அவரது பெய்ர் முகமது என்று கூறப் படுகிறது. இவருக்கு ரெயில் குண்டு வெடிப்பில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள். இதையடுத்து அவரை போலீசார் பிடித்துச் சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.  சென்னையில் பிடிபட்ட பாகிஸ்தான் உளவாளி ஜாகீர்உசேன் போலீசில் கொடுத்த தகவல் அடிப்படையில் ஆஸ்பத்திரி ஊழியர் பிடிபட்டதாக தெரிகிறது.


«
Next
Newer Post
»
Previous
Older Post