Slider

Blog links

Featured Posts Coolbthemes

இலங்கைச் செய்திகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

விந்தை உலகம்

தீவகச் செய்திகள்

» » » புது­மாத்­தளன் பகு­தியில் உள்ள வைத்­தி­ய­சா­லையை இயங்க வைக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் மக்கள் கோரிக்கை

முல்­லைத்­தீவு புது­மாத்­தளன் பகு­தியில் உள்ள வைத்­தி­ய­சா­லையை இயங்க வைக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என இப்­ப­குதி மக்கள் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

முல்­லைத்­தீவு புது­மாத்­தளன் பகு­தியில் தற்­போது வைத்­தி­ய­சாலை எதுவும் இல்­லா­ததால் இங்­குள்ள 400 இற்கும் மேற்­பட்ட குடும்­பங்கள் தமது அவ­சர மருத்­துவ தேவை­களைப் பூர்த்தி செய்­வ­தற்கு சிர­மங்­களை எதிர்­கொள்­கின்­றன.

அம்­ப­லவன் பொக்­கணை இடைக்­காடு புது­மாத்­தளன் வலை­ஞர்­மடம் செம்­மன்­குன்று ஆகிய பகு­தி­களில் 400 இற்கும் மேற்­பட்ட குடும்­பங்கள் வாழ்ந்து வரு­கின்­றன. மாத்­தளன் பகு­தியில் உள்ள வைத்­தி­ய­சாலை இறுதி யுத்­தத்­தினால் மிக­மோ­ச­மாக சேத­ம­டைந்து வைத்­திய சேவைச் செயற்­பா­டுகள் செய­லி­ழந்­துள்­ளன.

இந்­நி­லையில் புது­மாத்­தளன் பகு­தியில் அமைக்­கப்­பட்ட ஆரம்ப சுகா­தார நிலையம் அதன் பணிகள் நிறை­வுற்ற போது இது­வரை திறந்து வைக்­கப்­ப­ட­வில்லை. இதனால் இப்­ப­குதி மக்கள் 10 கிலோ மீற்­ற­ருக்கு அப்பால் சென்றே அடிப்­படை மருத்­துவத் தேவை­களை பெற்­றுக்­கொள்­ள­வேண்­டி­யுள்­ளது.

எனவே இப்­பி­ர­தேச மக்­களின் அவ­சர மருத்­துவ தேவையை நிறை­வு­செய்­வதைக் கருத்தில் கொண்டு இவ் வைத்­தி­ய­சா­லையை இயங்க வைக்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

«
Next
Newer Post
»
Previous
Older Post