திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பல கிராமங்கள் இன்று செவ்வாய் அதிகாலை முதல் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டு வருகின்றது. இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் இராணுவத்தினர் சுற்றி வளைத்து தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
15 வயதிற்கு மேற்பட்டவர்களை தாங்கள் விசாரிக்கப்போவதாகவும் இதற்கு பொது மக்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்குமாறும் படையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுத்ததன் பின்னர் இந்த சுற்றி வளைப்பு இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைத்துறை, ஈச்சிலம்பற்று, புன்னையடி, கல்லடி இலங்கைத்துறை முகத்துவாரம் போன்ற கிராமங்களே சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல்,மற்றும் விசாரணைகளை இராணுவத்தினர் மேற்கொண்டனர்.
இதேவேளை 15 வயதிற்கு மேற்பட்டவர்களையும் சந்தேகித்திற்கிடமானவர்களையும் படையினர் தடுத்து வைத்து விசாரித்து வருவதாகவும் அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று மாலை இலங்கைத்துறை கடற்கரைப் பகுதியில் சிலர் சந்தேகத்திற்கிடமாக நடமாடியதாகவும் உடனடியாக அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியபோது ரீ-56 ரக துப்பாக்கி ஒன்று, 2 மகஸின்கள், 78 தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டதாகவும் கடற்படைத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு நிருபர்.
Slider
Blog links
Featured Posts Coolbthemes
இலங்கைச் செய்திகள்
இந்தியச் செய்திகள்
உலகச் செய்திகள்
சினிமா செய்திகள்
விந்தை உலகம்
தீவகச் செய்திகள்
Home
»
Sri lanka news
»
Srilanka1
» திருகோணமலை, வெருகல் பிரதேசம் படையினரால் சுற்றிவளைப்பு. ரீ-56 ரக துப்பாக்கி ஒன்று, 2 மகஸின்கள், 78 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாக கடற்படைத் தகவல்கள்.
Tamil Karaokes's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Popular Posts
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு மற்றும் கிராண்குளம் ஆகிய பிரதேசங்களிலுள்ள குடும்பங்...
-
ஆறு மாதங்களில் முடியாததை ஆளுநர் 6 நாட்களில் செய்து விட்டார் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல் என்ற வகையில் ஆறு மாதங...
-
யாழ்.மாநகர சபையில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வந்துள்ள 87 பணியாளர்களுக்கு இன்றைய தினம் (28) நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன. முன்னுரிமை...
-
தேர்தல் விதிகளை மீறியதாக குஜராத்தில் அந்த மாநில முதல்வரும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள...
-
வடக்கில் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் பலாத்கார சம்பவங்களுடன் தொடர்புடைய 17 இராணுவச் சிப்பாய்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்...
-
கடந்த 2 தினங்களுக்கு முன்னர் திருகோணமலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயல்குழு கூட்டம் நடைபெற்றது யாவரும் அறிந்ததே. இதில் கலந்துகொண்ட ...
-
ஒரு ஆண் எத்தனை பெண்களையும் திருமணம் செய்ய அனுமதி- கென்யாவில் புதிய சட்டம்! ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ள அனுமத...
-
மத விவகார பிரச்சினைகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட காவற்துறை குழு, சிறுபான்மை மதங்களை அடக்குவதற்காக முன்னெடுக்கப்பட்ட மற்று...
-
அப்பன் என்ற புலி உறுப்பினர், அநுராதபுரத்தில் தங்கியிருந்த போது மேற்படி தபால் ஊழியர் அவருக்கு உதவியதாக பொலிஸார் கூறினர். புலிகள் இயக்கத்துக்க...
-
சூர்யா ‘அஞ்சான்’ படம் முடிந்ததும் வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் ப...
