Slider

Blog links

Featured Posts Coolbthemes

இலங்கைச் செய்திகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

விந்தை உலகம்

தீவகச் செய்திகள்

» » » முட்டையைக் காட்டி சிறுமியை பாலியல் வல்­லுற­வுக்குட்­ப­டுத்­திய ­சந்­தேக நபர் நஞ்­ச­ருந்தி தற்­கொலைக்கு முயற்சி.

எட்டு வயது நிரம்­பிய சிறு­மி­யான பாடசாலை மாண­வியை பாலியல் வல்­லுற­வுக்குட்­ப­டுத்­திய ­சந்­தேக நபர் ஒருவர் நஞ்­ச­ருந்தி தற்­கொலை செய்ய முயன்ற நிலையில் சிலாபம் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக முந்தல் பொலிஸார் தெரி­வித்­தனர்.





முந்தல் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கும்புக்­க­ட­வள பிர­தேசத்தைச் சேர்ந்த சிறு­மியே இவ்­வாறு பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட மாண­வி­யாவார்.





பாதிக்­கப்­பட்ட சிறுமி தமது வீட்டுத் தேவைக்­காக முட்டை வாங்­கு­வ­தற்­காக வேண்டி சந்­தேக நப­ரு­டைய கடைக்குச் சென்றுள்ளார். இதன் போது முட்டை தரு­வ­தாகத் தெரி­வித்து சிறு­மியை கடையின் பின்­பு­ற­மாக அழைத்துச் சென்­றுள்ள சந்­தேக நபர் அங்­கி­ருந்த அறை ஒன்­றுக்குள் வைத்து சிறு­மியைப் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இத­னை­ய­டுத்து வீட்­டுக்குச் சென்­றுள்ள சிறுமி நடந்த சம்­ப­வத்தை தனது தாயிடம் தெரி­வித்­த­தை­ய­டுத்து தாய் சம்­பவம் தொடர்பில் முந்தல் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.





சிறு­மியைப் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டு தொடர்பில் தனக்கு எதி­ராக முந்தல் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டி­ருப்­பதை அறிந்து கொண்ட சந்­தேக நபர் தற் ­கொலை செய்து கொள்ளும் நோக்கில் நஞ்­ச­ருந்­தி­யுள்­ள­தாக பொலிஸார் தெரி­வி த்­தனர். இவ்­வாறு நஞ்­ச­ருந்­திய அவர் முந்தல் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்பட்ட பின்னர் அங்­கி­ருந்து மேலதிக சிகி ச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.





சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

«
Next
Newer Post
»
Previous
Older Post